இந்தியா அழித்த செய்மதியால் விண்வெளியில் 400 சிதைவுகள்

இந்தியா தனது ஏவுகணையைக் கொண்டு விண்வெளியிலுள்ள செய்மதியை சுட்டு வீழ்த்தியது அபத்தமான செயல் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் தலைவர் கூறியுள்ளார்.

அதனால் தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள் சிதைந்து 400 துண்டுகளாகி, பரவிக் கிடப்பதாய் அவர் சாடினார். அது ஐ.எஸ்.எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருக்கும் ஆய்வாளர்களுக்கும் ஆபத்தான ஒன்று என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பூமியிலிருந்து 300 கிலோமீற்றர் உயரத்திலிருந்த செயற்கைக்கோளை கடந்த வாரம் இந்தியா வீழ்த்தியது. அது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு கீழே இருந்த செயற்கைக் கோளாகும்.

இருப்பினும் அதன் சிதைவுகள் நிலையத்தின் மிக உயரிய எல்லை வரை சென்றிருப்பது, அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக நாசா தெரிவித்தது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது சிதைவுகள் மோதும் சாத்தியம் 44 வீதம் அதிகமாகியுள்ளதாகவும் அது குறிப்பிட்டது

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை