‘சுப்பர் 4’ மாகாண மட்ட ஒருநாள் தொடர்: கொழும்பு அணி 82 ஓட்டங்களால் வெற்றி

தம்புள்ளை அணிக்கு எதிரான ‘சுப்பர் 4’ மாகாண மட்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கொழும்பு அணி 82 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.

இலங்கை கிரிக்கெட்டால் நடத்தப்படும் இந்த தொடரின் ஆரம்ப போட்டியாகவே (04) தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு மற்றும் அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமையிலான தம்புள்ளை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொழும்பு அணி ஸ்திரமான ஆரம்பத்தை பெற்றது. ஆரம்ப வீரர் உபுல் தரங்க 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும் மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ வேகமாக 54 ஓட்டங்களை குவித்தார்.

தினேஷ் சந்திமால் மற்றும் கமிந்து மெண்டிஸ் இரண்டாவது விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். நிதானமாக துடுப்பாடிய சந்திமால் 66 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்றார். மெண்டிஸ் 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஐ.பி.எல் தொடரை அடுத்து மாகாண ஒரு நாள் தொடரிலும் அசத்திய லசித் மாலிங்க

இந்நிலையில் கடைசி வரிசையில் சாமிக்க கருணாரத்ன 53 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் பெற்ற 57 ஓட்டங்களும் கொழும்பு அணி தனது ஓட்டங்களை அதிகரிக்க உதவியது.

இதன் மூலம் கொழும்பு அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை பெற்றது. இதன்போது தம்புள்ளை அணிக்காக அனுபவ வீரரான ஜீவன் மெண்டிஸ் 36 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எட்ட முடியுமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ளை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றம் கண்டது. முதல் விக்கெட்டை 9 ஓட்டங்களில் பறிகொடுத்த அந்த அணி இடைவிடாது விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களுக்கே சுருண்டது.

குறிப்பாக தம்புள்ளை அணியின் முதல் 6 வீரர்களில் ஐவர் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். மெத்திவ்ஸ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். பானுக்க ராஜபக்ஷ மத்திய வரிசையில் பெற்ற 38 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும். கொழும்பு அணி சார்பில் சுரங்க லக்மால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Sat, 04/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை