274 கிலோகிராம் ஹெரோயின் நடுக்கடலில் மீட்பு

படகில் கடத்தும்போது கடற்படை அதிரடி

கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்ட சுமார் 274 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து 05 சந்தேக நபர்களுடன் கைப்பற்றியுள்ளனர்.

பெருந்தொகையான போதைப்பொருட்கள் கடல் வழியாக கடத்தப்படுவதாக இலங்கை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடற்படைக்கு வழங்கிய தகவலையடுத்து 'சாகர' கப்பலுக்குச் சொந்தமான கடற்படையினர் குறித்த மீன்பிடி படகை கைப்பற்றினர். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஆழ்கடல் மீன் பிடி படகிலிருந்தே சுமார் 274 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. படகிலிருந்து கைப்பற்றப்பட்டவர்கள் மதுரங்குளி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31,39,40,44 மற்றும் 45 வயதுகளையுடையவர்களென்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கரைக்கு எடுத்து வரப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடி படகு மற்றும் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேக நபர்களும் திருகோணமலை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இப்போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை