சித்திரவதைக்குள்ளான 26 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று, வீடுகளில் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளான 26 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் தாங்கள் பணிபுரிகின்ற வீடுகளில் துன்புறுத்தல்களுக்குள்ளான நிலையில், இலங்கை தூதரகத்தை நாடி, அங்கு சுரக்ஷா தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர், அவர்கள் அனைவரும் தற்காலிக கடவுச்சீட்டு மூலம், அவர்களது சொந்த பணத்தில், விமானச்சீட்டுகளை கொள்வனவு செய்து அங்கிருந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களில், இருவர் மாத்திரம் குவைத்தில் பணிப்பெண்களாக 1 - 2வருட காலம் பணிபுரிந்துள்ளதோடு, ஏனைய 24பேரும் ஒரு வருடத்திற்கு குறைவான கால சேவையைக் கொண்டுள்ளனர்.

அதில் ஐவர், தங்களுக்கு ஏற்பட்ட சித்திரவதை காரணமாக நோயுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Wed, 04/17/2019 - 12:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை