25ஆம் திகதி வரை மழை பெய்யும் சாத்தியமில்லை

இதுவரை 29,774 குடும்பங்கள் பாதிப்பு

வரட்சி காரணமாக நாடு முழுவதும் 29,774 குடும்பங்களைச் சேர்ந்த 1,03,038 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின் பிரகாரம் வடமாகாணமே வரட்சியால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வடமாகாணத்தில் 10,110 குடும்பங்களைச் சேர்ந்த 33,593 பேர் இவ்வாறு வரட்சிக்கு முகங்கொடுத்துள்ளனர்.  

மத்திய மாகாணத்தில் 7,750 குடும்பங்களைச் சேர்ந்த 27,081 பேரும், வடமேல் மாகாணத்தில் 9,882 குடும்பங்களைச் சேர்ந்த 35,161 பேரும் வரட்சியால் அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அடுத்துவரும் நாட்களில் நாட்டில் சில பகுதிகளில் குறைந்தளவான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கருணாகொட தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்பமான காலநிலை எதிர்வரும் 25ஆம் திகதிவரை தொடரும்.

கடந்த சில நாட்களாக 38 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது. வடமத்திய, வடகிழக்குப் பகுதிகளில் இவ்வாறு வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதிவரை சூரியன் சில பிரதேசங்களுக்கு உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)    

Sun, 04/07/2019 - 13:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை