பிள்ளைகளை துன்புறுத்திய தம்பதிக்கு 25 ஆண்டு சிறை

கலிபோர்னியாவில் உள்ள வீட்டுக்குள் சொந்த பிள்ளைகளை அடைத்துவைத்து சித்திரவதை செய்த பெற்றோருக்கு தலா 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டேவிட், லுயிஸ் டர்பின் தம்பதி தங்களின் 13 பிள்ளைகளையும் ஒன்பது ஆண்டுகளாக மோசமாக நடத்தியதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

25 ஆண்டுகளுக்குப் பின்னர் பிணை வழங்கப்படாமல் இருந்தால் இந்தத் தம்பதியர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.

பெற்றோர் தங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்திருந்தாலும் தங்களின் தாயையும் தந்தையையும் இன்னும் நேசிப்பதாக டேவிட், லுயிஸ் டர்பின் தம்பதியின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் பிடியில் சிக்கியிருந்த 2 வயது முதல் 29 வயது வரையிலான 13 பிள்ளைகளும் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாகினர். அத்தம்பதியினர் பல நாட்கள் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்காமலும் மாதக் கணக்கில் பிள்ளைகளை கட்டிப்போட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

கலிபோர்னியாவில் உள்ள அசுத்தமான வீட்டிலிருந்து 17 வயது மகள் தப்பிச்சென்று பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் அந்தத் தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

 

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை