ருவாண்டா படுகொலையின் 25 ஆண்டுகள் அனுஷ்டிப்பு

ருவாண்டா மக்கள் தொகையில் பத்தில் ஒருவர் கொல்லப்பட்ட படுகொலையின் 25 ஆண்டு பூர்த்தியை அனுஷ்டிக்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

1994 ஆண்டு 100 நாட்களுக்குள் கொல்லப்பட்ட 800,000 மக்களுக்காகவே இந்த துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் ஹுடு இனக் கடும்போக்காளர்களால் சிறுபான்மையினரான டுட்சிக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இனப்படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவந்த ஜனாதிபதி போல் ககாமே, தலைநகர் கிகாலியில் உள்ள நினைவுச் சின்னத்தில் சுடர் ஏற்று இந்த நினைவு நிகழ்வை ஆரம்பித்து வைக்கிறார். இதனைத் தொடந்து ஒரு வார காலம் இந்த ஞாபகார்த்த செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை