நேபாளத்தில் புயல், மழை: 25க்கும் மேற்பட்டோர் பலி

நேபாளத்தின் தெற்குப் பகுதியில் புயல் மழை காரணமாக 25 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க தொடர்ந்து முயன்று வருவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று உள்ளுர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த சம்பவத்தினால், மரங்கள், மின்சாரக் கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்கள் ஆகியவை வேரறுக்கப்பட்டதாக, உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட பாரா வட்டாரம், இந்தியாவின் பீஹார் மாநிலத்தின் எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

கனமழை மற்றும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நேபாள நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை