பேராதனை பல்கலைக்கழகத்தில் 24 மணிநேர பாதுகாப்பு ஏற்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 24மணி நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்காக கெமராக்கள் பொருத்தப்பட்டு வருவதோடு பாதுகாப்பு பிரிவினர் திடீர் சோதனைகளையும் நடத்தி வருகின்றனர். இங்குள்ள பள்ளிவாசல் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

புர்கா அணிவதை தடைசெய்யவுள்ளதாக பீடாதிபதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதம பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தெரிவித்தார்.  

கலஹா, மாகந்தபாதை, பேராதனை, கம்பளை வீதி மற்றும் அக்பர் பாலம், விளையாட்டு உள்ளரங்கு வீதி ஆகியன தீடீர் திடீரென வீதி தடை போடப்பட்டுச் சோதனையிடப்படுகிறது. பல்கலைக்கழகம் சுற்றுலா பயணிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் மறு அறிவித்தல் வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம் வெளியாருக்கு வாடகைக்கு விடுவது நிறுத்தப்பட்டுள்ளதோடு காலை, மாலை வேளைகளில் உடல் அப்பியாசத்திற்கு வருவோரது வாகனங்கள் மைதான தரிப்பிடத்தில் நிறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  

பல்கலைக்கழகங்கள் 6ஆம் திகதி திங்கட்கிழமை மாணவர்களுக்காக மீளத் திறக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது.

(கண்டி தினகரன் சுழற்சி நிருபர்)

Tue, 04/30/2019 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை