23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி

கோலுன்றிப் பாய்தலில் பிலிப்பைன்ஸ் வீரர் சாதனை

23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி கட்டார் கலிபா குளிரூட்டப்பட்ட சர்வதேச அரங்கில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. முதல் நாளில் ஒரு சாதனையுடன் 18 பதக்கங்கள் வெல்லப்பட்டன.

பிலிப்பைன்ஸ் வீரர் ஏர்னஸ்ட் ஜோன் கோலுன்றிப் பாய்தலில் 5.71 மீற்றர் பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார். 1993 ஆம் ஆண்டு கஸகஸ்தான் வீரர் 5.70 மீற்றர் பாய்ந்ததே சாதனையாக இருந்தது.முதல் நாளில் 21 போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.அதில் பஹ்ரைன் அணி 4 தங்கப்பதக்கங்களை பெற்றது மட்டுமில்லாமல் சம்பியன் சாதனையும் நிலை நாட்டப்பட்டது.

42 நாடுகளில் இருந்து 700 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.அவர்கள் 43 போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு 186 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்கள் நடைபெறும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்க 42 நாடுகளில் வீரர்கள் தங்களது நாட்டு தேசிய கொடியுடன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டமை விசேட அசமாகும்.

இந்த போட்டியில் முதலில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சீன வீராங்கனை லியு ஹுய்குயி 65.83 மீற்றர் எறிந்து ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் தனது சிறந்த பிரதியாகவும் அது உள்ளது.அத்துடன் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

முதல் நாளில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சீன வீராங்கனை லியு ஹுய்குயி மற்றும் கோலூன்றிப் பாய்தல் ஆண்களுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரர் ஏர்னஸ்ட் பேர்ன் தங்கப்பதக்கத்தையும் 5000 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் பஹ்ரையின் வீரராங்கனைக்கு தங்கப்பதக்கமும் பெண்களுக்கான குண்டு எறிதலில் சீன வீராங்கனை லிஜியோவுக்கு தங்கப்பதக்கமும் 400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் பஹ்ரைன் வீராங்கனை சல்வா நஸார் தங்கப்பதக்கத்தையும் பெற்றனர்.அத்துடன் பரிதி வட்டம் வீ'சுதல் ஆண்களுக்கான போட்டியில் ஈரான் வீரர் எஸான் கடாடி தங்கப்பதக்கத்தையும் ஆண்களுக்கான 3000 மீற்றர் வேக நடைப் போட்டியில் பஹ்ரைன் வீரர் ஜோன் கிபட் கொய்ச் தங்கப்பதக்கத்தையும் பெற்றார்.அத்துடன் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் போட்டியில் பஹ்ரைன் வீரர் டவிட் பிக்காடு தங்கப்பதக்கத்தை பெற்றார்.

இலங்கை சார்பாக ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையின் சுமேத ரணசிங்க பங்கேற்கிறார். இலங்கை நேரப்படி 7.33 மணிக்கும் ஆண்களுக்கான முப்பய்ச்சல் இறுதிப் போட்டியில் கிரிஷான் தனஞ்சய 7.47 மணிக்கும் பங்கேற்கும் அதேவேளை ஹிமாஷ எஸான் பங்கேற்கும் ஆண்களுக்கான 100 மீற்றர் அரையிறுதிப் போட்டி இரவு 8.15 மணிக்கும் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் நிமாலி மற்றும் கயந்திக்கா ஆகியோர் பங்கேற்கின்றனர் .இந்த போட்டி இரவு 8.58 மணிக்கு இடம்பெறுகிறது.அத்துடன் ஆண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் ருசிரு சத்துரங்க பங்கேற்கும் அதேவேளை அந்த போட்டி இரவு 9.36 மணிக்கு இடம்பெறுகிறது.ஆசிய வேகப்புயல் ஹிமாஷ எஸான் பங்கு பற்றும் ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.50 மணிக்கு இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

கொழுப்பில் மற்றும் ஏனைய இடங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை கண்டிக்கும் முகமாக முதல் நாளில் இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதி காண்போட்டியில் இலங்கை வீரர் ஹிமாஷா எஸான் போட்டியின் போது கறுப்பு பட்டியனிந்து தனது எதிர்ப்பை வெளிக்காட்டியமை விசேட அம்சமாகும். அத்துடன் தனது அணி சார்பாக கண்டனத்தையும் எஸான் தெரிவித்தார்.அனைவரும் ஒன்றினைந்து இந்த தக்குதல் செயலைக் கண்டிப்பதாகவும் அவர் கட்டாரில் இருந்து தெரிவித்தார். உலக மெய்வல்லுனர் போட்டி வரும் செப்டெம்பர் மாதம் கலிபா அரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

கட்டாரிலிருந்து பரீத். ஏ. றகுமான்

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை