23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி கட்டாரில் நேற்று கோலாகல ஆரம்பம்

23 ஆவது ஆசிய மெய்வல்வலுனர் போட்டியில் நேற்று கட்டார் குளிரூட்டப்பட்ட கலிபா அரங்கில் கோலாகலமாக ஆரம்பமானது. இலங்கை சார்பாக தெரிவுப்போட்டிகளில் பங்கேற்ற 6 வீரர்களும் அடுத்த சுற்று தகுதி பெற்றுள்ளர்.பெண்களுக்கான 800 மீற்றர் தகுதி காண் போட்டியில் பங்கேற்ற கயந்திக்கா அபேரத்தன முதலிடத்தை பெற்றார்.அத்துடன் முதலாவது தகுதி காண் போட்டியில் நிமாலி லியனாராச்சி மூன்றாமிடத்தை பெற்றார்.

கயந்திக்கா அபேரத்ன 2.05.20 நிமிடங்கள் பெற்றுக் கொண்டார். அத்துடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார். அவர் 2.05.33 நிமிடங்களை பெற்றுக் கொண்டார்.அத்துடன் தகுதி காண் போட்டியில் முதல் நடைபெற்ற போட்டியில் நிமாலி 2.05.10 நிமிடங்கள் பெற்றுக் கொண்டார்,அத்துடன் முதல் இடத்தை சீன நாட்டு வீராங்கனை 2.04.93 நிமிடங்களை பெற்றுக் கொண்டார்.

அத்துடன் 400 மீற்றர் பெண்களுக்கான தகுதிகாண் ஆட்டத்தில் நதீஷா முதல் இடத்தை பெற்றார்.அவர் 53.66 செக்கன்களில் ஓடி முடித்தார்.இரண்டாமிடத்தை கஸகஸ்தான் வீராங்கனை பெற்றுக் கொண்டார்.அவர் 54.26 செக்கன்களில் ஓடிமுடித்தார்.

இதேவேளை ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் போட்டியில் இரண்டாவது தெரிவு போட்டியில் அஜித் பிரேம குமார மூன்றாமிடத்தை பெற்றார்..அவர் 43.31 செக்கன்களில் நிறைவு செய்தார்.முதல் இடத்தை ஜப்பான் நாட்டு வீரரும் அவர் 46.00 செக்கன்களையும் இரண்டாமிடத்தை கெரிய வீரர் பெற்றுக் கொண்டார்அவர் 47.01 செக்கன்களில் நிறைவு செய்தார்.

அத்துடன் ஆண்களுக்கான முப்பாய்ச்சல் தெரிவு போட்டியில் இலங்கையின் ஹேஷான் தனஞ்சய மூன்றாமிடத்தை பெற்றார்..அவர் 15.87 மீற்றர் பாய்ந்து தெரிவு செய்யப்பட்டார்.முதல் இடத்தை சீன வீரரும் இரண்டாமிடத்தை பிலிப்பைன்ஸ் நாட்டவரும் பெற்றனர்.அவர்கள் முறையே 16.52 மீற்றர் மற்றும் 16.16 மீற்றர் பாய்ந்தனர்.அதேநேரம் ஆண்களுக்கான 800 தெரிவுப் போட்டியில் இலங்கையின் சத்துரங்க மூன்றாமிடத்தை பெற்றார்..அவர் 1.50.55 நிடமிடங்களை பெற்று தகுதி பெற்றார்.இதில் முதலிடத்தை போட்டியை நடத்தும் காட்டார் வீரர் பெற்றார்..அவர் 1.50.12 நிமிடங்களிலும் இரண்டாமிடத்தை சீன வீரரும் பெற்றார். அவர் 1.50.31 நிமிடங்களை பெற்றார்.43 நாடுகளில் இருந்து 700 மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளர். 43 போட்டிகளுகாக 186 பதக்கங்களுக்கே இவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.இலங்கை சார்பாக 15 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலால் இலங்கை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பதற்றத்துடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.21 ம்திகதி முதல் 24 ம் திகதி வரை இப் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.உலகிலேயே முதலாவது குளிரூட்டப்பட்ட விளையாட்டு அரங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை மெய்வல்லுனர் சங்க தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகளும் வீரர்களுக்கு உற்சாக மூட்டியதை காணக்கூடியதாக இருந்தது.

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை