23 சிறுவர்களுக்கு விசம் கொடுத்த ஆசிரியை கைது

சீனாவில் பாலர் பாடசாலை ஒன்றில் சிறுவர்களுக்கு விசம் கொடுத்த ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 23 சிறுவர்கள் சுகவீமுற்றுள்ளனர்.

கிழக்கு சீனாவின் ஜியாசோ நகரில் வாங் என்று மாத்திரம் அடையாளம் வெளியிடப்பட்ட அந்த ஆசிரியை சிறுவர்களின் உணவில் சோடியம் நைட்ரேட்டை கலந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் மீன் தயாரிப்பு உணவுகள் கெடாமல் இருப்பதற்காக சோடியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும். ஆனால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக அளவில் நச்சுத்தன்மையை தரக்கூடிய குணம் மிக்கதாக சோடியம் நைட்ரேட் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாடசாலையில் விசாரணை நடத்தியபோது, ஆசிரியை குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி அளித்ததும் அவர் உணவில் நைட்ரேட் கலந்துகொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

இதில் உடனடியாக 15 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஒரு குழந்தைக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வளாகம் தெரிவித்துள்ளது.

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை