நிமாலி தலைமையில் இலங்கை அணி 19 ம் திகதி கட்டார் பயணம்

கட்டாரில் நடைபெறும் 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணிக்கு 800 மீற்றரில் தங்கப்பதக்கம் வென்ற நிமாலி லியானராச்சி தலைமையில் எதிர்வரும் 19ஆம் திகதி கட்டார் நோக்கி பயணமாகிறது.

இத்தொடர் 21 ம் திகதி முதல் 24 ம் திகதி கட்டார் கலிபா அரங்கில் நடைபெறுகிறது.

இலங்கை அணிக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பில் பெரும் எதிர்பார்ப்பில் நிமாலி லியானாராச்சி 800 மீற்றர் பெண்களுக்கான போட்டியில் ஆசியாவின் சிறந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.அண்மையில் சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் நிமாலி 2 நிமிடம் 3 செக்கனில் போட்டியை நிறைவு செய்திருந்தார்.

இலங்கை மெய்வல்லுனர் வீரர் ஹிமாஷ எஷான் மாத்திரம் மேலதிக பயிற்சியை பெறுவதற்காக இன்று 13 ம் திகதி கட்டார் நோக்கி பயணமாகிறார்.

அத்துடன் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனை நிலைநாட்டிய வினோஜ் சுரஞ்சயகே காயம் குணமடையாத காரணத்தினால் அவர் ஆசிய போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரியவருகிறது.

21ஆம் திகதி இடம்பெறும் போட்டிகள் கட்டார் நேரப்படி காலை 8.30 மணிக்கு இலங்கையின் நிமாலி 800 மீற்றர் தகுதி காண் போட்டியில் பங்கேற்கிறார். அத்துடன் 8.52 மணிக்கு தனஞ்சய முப்பாய்ச்சல் மற்றும் சத்துரங்க பெரேரா 800 மீற்றர் போட்டியிலும் நதிஷா ராமநாயக்க 400 மீற்றர் போட்டியிலும் அஜித் புஷ்பகுமார 400 மீற்றர் தகுதிகாண் போட்டியில் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான அஞ்சலோட்ட வீராங்கனைகள் இம்முறை பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.2017 ம் ஆண்டு இலங்கை அணிக்கு முகாமையாளராக இருந்த லால் சந்திர குமார இம்முறையும் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்:

ஆண்கள்

ஹிமாஷா எஷான் (100 மீற்றர்),

பிரசாத் விமலசிரி(நீளம் பாய்தல்),தனுஷ்க சந்தருவன்(நீளம் பாய்தல்),கிரிஷான் தனஞ்சய (முப்பாய்ச்சல்),சுமேத ரணசிங்க(ஈட்டி எறிதல்)அஜித் பிரேமகுமார (400மீற்றர்),ருசிரு சத்துரங்க (800 மீற்றர்),ஹேமந்த குமார (1500 மீற்றர்)

பெண்கள்

நிமாலி லியானராச்சி(800 மீற்றர்,4தர 400)கயந்திக்கா ரத்தநாயக்க 800 மீற்றர்,நிலானி ரத்நாயக்க 3000 மீற்றர்,விதுஷா லக்ஷானி முப்பாய்ச்சல்,நதிஷா ராமநாயக்க 400 மீற்றர்,4தர 400 மீற்றர்,தில்ஷி குமாரசிங்க 4தர 400 மீற்றர்,உபமாலிக்கா ரத்னகுமாரி 4தர 400 மீற்றர்.

அதிகாரிகள்

லால் சந்திரசேகர (முகாமையாளர்), ஐராங்கனி ருபசிங்க (பெண்களுக்கான தலைவி), சஜித் ஜயலால் (பயிற்றுவிப்பாளர்), சமிந்த பெரேரா (பயிற்றுவிப்பாளர்), சானக்க ரணசிங்க (உடற்கூற்று நிபுணர்) லால் ஏக்கநாயக்க (வைத்தியர்).

பரீத். ஏ. றகுமான்

Sat, 04/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை