விசேட சோதனை நடவடிக்கையில் மேலும் 16 பேர் கைது

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின்போது, மேலும் 16 பேர் நேற்றிரவு (24) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, திரப்பனே, வத்தளை, தெல்தெனிய, பலாங்கொடை, மாத்தளை மற்றும் வவுணதீவு ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 21 ஆம் திகதி சில இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போது, இதுவரையில் 359 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றிலும் கிங்ஸ்பெரி ஹோட்டல், சினமன் கிரான் ஹோட்டல் சங்ரீலா ஹோட்டல் ஆகியவற்றிலும், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ட்ரொபிக்கல் இன் ஹோட்டல் மற்றும் தெமட்டகொடை மஹவில கார்டன் ஆகிய 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருந்தன. 

Thu, 04/25/2019 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை