16 சவூதி நாட்டவர்களுக்கு அமெரிக்கா பயணத் தடை

இஸ்தான்பூல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் கொலையுடன் தொடர்புட்ட 16 பேரை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அடையாளமிட்டுள்ளது.

இவ்வாறு அடையாளமிடப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அமெரிக்காவுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு எழுதி வந்த சவூதி நாட்டவரான கசோக்கி சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானை கடுமையாக விமர்சித்து வந்தார். கசோக்கியின் கொலை தொடர்பில் எதுவும் தெரியாது என்று மறுத்து வந்த சவூதி நிர்வாகம் சில வாரங்களில் அவர் துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது.

எனினும் முடிக்குரிய இளவரசருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பில்லை என்று அது தொடர்ந்து கூறி வருகிறது.

இவ்வாறு பட்டியலிடப்பட்டவர்களில் முடிக்குரிய இளவரசரின் முன்னாள் உதவியாளரான சவூத் அல் கத்தானியின் பெயரும் உள்ளது. அதேபோன்று முடிக்குரிய இளவரசரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் தோன்றுபவரான மஹர் மத்ரப்பும் இதில் அடங்குகிறார்.

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை