சிரிய கிளர்ச்சியாளர் பகுதியில் குண்டு தாக்குதல்: 15 பேர் பலி

சிரியாவின் அரச எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற வெடிப்பில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பினால் ஜிஸ்ர் அல் ஷுகுர் நகரில் மூன்று கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எனினும் இதற்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.

இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் கூட்டணி அலுவலகத்தின் முற்பகுதியிலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றிருப்பதாக காண்காணிப்புக் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் வான் தாக்குதல் மற்றும் சிரிய இராணுவத்தின் ஷெல் தாக்குதல்களுக்கு இடையில் இத்லிப்பில் அண்மைய மாதங்களில் பல குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. முந்தை குண்டு தாக்குதல்கள் குறித்து ஜிஹாத் கூட்டணி சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் உளவுப் பிரிவு மீது குற்றம்சாட்டுகிறது. கிளர்ச்சியாளர் பகுதியில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாக அந்த கூட்டணி குறிப்பிடுகிறது.

Fri, 04/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை