பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து பூகம்பம்: 11 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் தீவான லூசோவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

6.1 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் விமானநிலையம் ஒன்று மோசமாக சேதமடைந்திருப்பதோடு குறைந்தது இரண்டு கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் மேலும் தெற்காக மத்திய விசாயஸ் பிராந்தியத்தில் 6.4 புள்ளியில் மற்றொரு பூகம்பம் பதிவானது. இதில் டக்லோபான் நகர், லேயிட் மற்றும் கட்பலகோன் நகரங்கள் போசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இடித்த கட்டிடங்கள் மற்றும் வீதிகளில் ஏற்பட்டிருக்கு வெடிப்புகளின் புகைப்படங்கள் சமூகதளங்களில் வெளியாகியுள்ளன.

பல டஜன் பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மோசமாக தாக்கப்பட்ட பம்பங்கா மாகாணத்திலேயே 11 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன. தலைநகர் மனிலா உட்பட பல இடங்களிலும் இடிபாடுகள் விழுந்து பலரும் காயமடைந்துள்ளனர்.

எனினும் தொலைதூர பிராந்தியங்களை மீட்பாளர்கள் இன்னும் அடையாத நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உலகில் சுமார் 90 வீதமான பூகம்பம் தாக்கும் பிராந்தியத்திலேயே பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 7.1 ரிச்டர் சக்திவாய்ந்த பூகம்பத்தில் 220க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

1990 ஜூலையில் வடக்கு தீவான லுௗசோவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 2,400க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை