மஹியங்கனையில் பாரிய விபத்து: 10 பேர் உயிரிழப்பு

மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பதுளை – மஹியங்கனை பிரதான  வீதியில், மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று (17) அதிகாலை 1.30மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றும் வானொன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

உயிரிழந்தவர்களில் 3 சிறுவர்கள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Wed, 04/17/2019 - 07:56


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக