தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்க முடியாதோர் பதவியை துறக்க வேண்டும்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முடியாது போனால் அமைச்சுப் பதவியைத் துறக்கத் தயாரெனக் கூறியோர் 50 ரூபாவைக் கூட இன்னும் பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளதாக ஐ.ம.சு.மு. எம்.பி. மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் நோக்கத்திற்காக செயற்படாது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தோட்ட மக்களின் சம்பளம், வீடு, வீதிகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு அப்பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்தற்தில் நேற்று தபால், முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த அமரவீர எம்.பி.

வெளிநாடுகளில் தேயிலை உட்பட பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளில் தொழில்நுட்பம் உட்படுத்தப்பட்டு பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது. எமது மலையகப் பிரதேசங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை எதிர்கொண்டுள்ள சவாலை எதிர்கொள்ள வசதியாக தொழில் நுட்பம் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

தெங்குப் பயிர்ச் செய்கையிலும் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும் அத்துடன் தேங்காயின் விலை வீழ்ச்சியைடைந்துள்ள நிலையில் அத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேங்காயெண்ணை என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் விலங்கு கொழுப்பு உலர்ந்த எண்ணெய்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை