இலங்கையர்களின் ராவணா-1 செய்மதி விண்வெளிக்கு ஏவல்

AMF

இலங்கையின் இளம் பொறியியலாளர்கள் இருவர் இணைந்து தயாரித்த ராவணா- 1என்ற  முதலாவது பரிசோதனை செய்மதியானது இன்று (18) அதிகாலை நாசாவின் சர்வதேச விண்வெளி மைய்யத்துக்கு ஏவப்பட்டுள்ளது.

ஜப்பானின் க்யுஷு தொழில்நுட்ப நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இச்செய்மதி 1000 கியூபிக் சென்றிமீட்டர் அளவுடையதும் 1.1 கிலோகிராம் நிறையுடையதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பட்டதாரியும் ஆர்தர் சி கிலாக் நிலையத்தின் ஆராய்ச்சி பொறியியலாளருமான தரிந்து தயாரத்ன மற்றும் இந்நிலையத்தைச் சேர்ந்த எந்திரவியல் பொறியியலாளரான துலனி சாமிக ஆகிய இளம் பொறியியலாளர்களே குறித்த செய்மதியை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 04/18/2019 - 10:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை