நாவிதன்வெளியில் கம்பெரலிய மூலம் 06 வீதிகள் புனரமைப்பு

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் 60 இலட்சம் ரூபா நிதியில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 6 வீதிகள் செப்பனிடப்படவுள்ளன. அம்பாரை மாவட்டத்தின் கரையோர பகுதி இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத்திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சுரேஸ்.டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஆனந்தன், எஸ்.கிருபைமலர், நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

(சென்றல்கேம்ப் குறூப் நிருபர்)

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை