The Cow

சினிமா எனும் கோட்பாட்டினுள் நாம் பல்வேறு வகையான கலாசார விழுமியங்கள், பண்பாட்டு கூறுகள், சமூக கட்டமைப்புகள் போன்ற பல இன்னோரன்ன வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் காட்சியியல் ரீதியாக கண்டு இன்புறுகிறோம். அவ்வகை சமூக போக்கு சார்ந்த சினிமாக்கள் நுணுக்கமாக கையாளப்பட்டு இயக்கப்படுகின்ற போது அவை நீட்சியான காலத்தினை வென்று நிலைத்து நிற்கக்கூடிய படைப்பாக சமூக போக்கின் முன் காட்சியளிக்கும் என்பது காலம் காட்டும் உண்மையே.

இவ்வரிசை நிரலில் தர்யுூஷ் மெஹ்ருஜியினால் 1969 ம் ஆண்டு ஈரானில் இயக்கப்பட்ட the cow எனும் திரைப்படம் ஈரானின் வறுமை நிலை, பிற்போக்குத் தன்மை வாதம், அலையும் மனிதவாத செயல்கள் போன்றவற்றை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியது. இத்திரைப்படம் ஷா அரசினால் தடை செய்யப்பட்டு பின்பு ஷா அரசுக்கு முந்திய ஈரானின் நிலை எனும் காட்சிப்படுத்தலோடு திரையிடப்பட்டது... 

இரட்டை நிலை மனோபாவம், உயிர்கள் மீதான அன்பில் நிலை கொண்டு விடுதல் பற்றிய கதையாடலினை அற்புதமாக செதுக்கிய படைப்புக்களுள் the cow என்றும் நினைவினை விட்டு அகலாத சினிமா. ஹஸன் என்பவன் மிகவும் அன்பாக வளக்கின்ற பசுவானது அவன் ஊரிலில்லாத போது இறந்து போகிறது.

இதற்கிடையே ஹஸனின் பக்கத்து ஊரார்கள் ஹஸனுடைய ஊரில் வழக்கப்படுகின்ற கோழி, ஆடு, மாடு ஆகியவற்றை திருடுகின்றவர்களாக இருக்கின்றனர். இரு ஊரார்களுக்குமிடையே எப்பொழுதும் தீராத பிரச்சினை நிகழ்ந்தபடியே இருக்கிறது. இதனை ஒரு காரணியாக வைத்து ஹஸனுடைய பசு இறந்து போனதை மறைத்து அது காணாமல் போய்விட்டது என ஊரார்கள் பொய் கூற இதனால் மிகவும் மனமுடைந்து போன ஹஸன் புதிய வகையான ஒரு பிரம்மை நோய்க்குல் அகப்படுகிறான்.

பசுவின் ஆத்மா அவனிற்குள் புகுந்ததாக உணர்ந்த ஹஸனின் நடத்தைகளில் பசுக்கான அனைத்து செயற்பாடுகளும் இயல்பாகவே பிரதிபலிக்கிறது.  இடை இடையே மனித குனம் அவனிடம் காணப்பட்டாலும் பசுவாக ஹஸன் வாழ்ந்து மடிந்து போவது புதிய அலை சினிமா. இவ்வாறான காரணிகளுக்காகவே the cow காத்திரமான சினிமா பட்டியல்களுள் எவ்வித சிக்கலும் இல்லாமல் சேர்ந்து விடுகிறது எனலாம். சினிமா விம்பம் என்பதை கட்டுடைப்பு செய்து மனித வாழ்வியலின் வலிமையினை விசித்திரமாக கதையாடிய the cow ஒரு உன்னத படைப்பு.

இதுவே சினிமா கொண்டிருக்கின்ற விழுமியங்களில் மிகச் சிறந்தது எனலாம். 

Sat, 03/16/2019 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை