TAFA: கூட்டாண்மையை நீடிக்கும் கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ்

கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் பிரைவட் லிமிடட் தொடர்ச்சியாக 3ஆவது பருவத்திற்காக தாபித் அஹமட் கால்பந்து அகடமிக்கு (TAFA) அனுசரணை வழங்குகிறது.

இலங்கையின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் மிக முக்கியமான பெயர்களில் ஒன்றான, கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் பிரைவட் லிமிடட் 2016 இல் TAFA வின் பிரதான அனுசரணையாளரானதோடு அது தொடக்கம் அந்த கூட்டாண்மை தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது.

விளையாட்டு ஆடைகளின் உத்தியோகபூர்வ வழங்குநர்களாக இருக்கும் கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் பிரைவட் லிமிடட் கழக அணிகள் போட்டிகளுக்காக சுற்றுப்பயணம் செல்லும்போது அனுசரணையும் வழங்கி வருகிறது. TAFA வின் அண்மைய வெளிநாட்டு சுற்றுப்பயணம் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்றதோடு ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபூதாபியில் இரு வயது பிரிவுகளில் மன்செஸ்டர் சிட்டி அபூதாபி கிண்ணத்தில் அவர்கள் விளையாடினர். 2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த பருவத்திற்காக TAFA தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இளம் சிறுவர்களுக்காக பயிற்சி அளிக்கும் ஆர்வத்துடன் கால்பந்தின் மீது பெரும் காதல் கொண்டவரான திரு தாபித் அஹமட் மூலம் 2009 ஆம் ஆண்டு TAFA ஆரம்பிக்கப்பட்டது. தரமான கால்பந்து வீரர்களை உருவாக்குவதற்கு அவர்களுக்கு ஆட்ட நுட்பங்களை பயிற்றுவித்து 4 தொடக்கம் 15 வயதுடைய இளம் வீரர்களை இந்த அகடமி வளர்க்கின்றது. தமது வீரர்களுக்காக கேளிக்கை, பாதுகாப்பு மற்றும் ஆட்ட துறைசார் சூழலில் உயர்தர சேவை ஒன்றை TAFA பெருமையுடன் வழங்குகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சிறந்து விளங்குவதற்கு தேவையான அடிப்படை திறன்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் தமது வீரர்களுக்கு பரந்த அளவில் உதவுவதையும் TAFA இலக்காக கொண்டுள்ளது. தகுதியுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் அஹமட்டின் பராமரிப்பின் கீழ் இரு பாலின சிறுவர்களும் பயிற்சி அளிக்கப்படுகின்றனர்.

'Penguin' வர்த்தகக் குறியின் கீழ் குடைகள், நுளம்பு வலைகள், மழைக்கோட்டுகள் மற்றும் காலுறைகள் ஆகியவற்றின் சந்தைப்படுத்தல் மற்றும் உற்பத்திகளின் முன்னோடியாக கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் பிரைவட் லிமிடட் விளங்குகிறது.

தமது அர்ப்பணிப்பு, விசுவாசம் மற்றும் கடப்பாட்டுடன் தரமான உற்பத்திகளை தயாரிப்பதில் சிறந்து விளங்குவதை தக்கவைத்துக் கொண்டு வாடிக்கையாளர்கள். நுகர்வோரை திருப்திப்படுத்துவதே அதன் நோக்கமாகும். 1978இல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் உயர்தரமான குடைகள் தயாரிப்பில் முன்னணியாகக் கொண்டு உற்பத்தி வரிசையில் முன்னேற்றத்துடன் உலக வர்த்தகத்தை இந்த நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. தமது உற்பத்தி செயல்முறையில் நிறுவனம் புதிய உயர்தர இயந்திரங்களை பயன்படுத்தி முழு அளவான காலுறைகளை பன்முகத்தன்மையுடன் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதோடு உள்நாட்டு சந்தையில் பெரும் பங்கை பெற்றிருக்கும் அதேவேளை ஜெர்மனி, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பிரிட்டனின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் உதவுகிறது.

தாபித் அஹமட் கால்பந்து அகடமி (TAFA) நிறுவனர், கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் பிரைவட் லிமிடட் தலைவர் எம்.டீ.எம். நௌஷாட் இடம் இருந்தும் பயிற்சியாளர் ஜேட் மூர் (TAFA), கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் பிரைவட் லிமிடட் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.டீ.எம். நவுபல் இடம் இருந்தும் 2019 ஆம் ஆண்டுக்கான அனுசரணையை பெறுவதைக் காணலாம்.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை