கொள்கலன் கையாளுகையை மேம்படுத்த Maersk Holdings பங்களிப்பு

இலங்கையின் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளை மேம்படுத்த மார்க்ஸ் ஹோல்டிங் நிறுவனம் முன்வந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவை நேற்று  முன்தினம் இந்நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். 

இது தொடர்பாக தற்போது Maersk Holdings நிறுவனம் இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.  

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு இதன்மூலம் வசதிகள் ஏற்படுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் மூலம் இலங்கையில் பொருளாதாரத்திற்கும் பாரிய ஒத்துழைப்பு கிடைக்குமென தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.  

தெற்காசியாவின் Maersk Holdings நிறுவனத்தின் சிரேஷ்ட பணிப்பாளர், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் தலைவர் கிஷான் பாலேந்திரன், தெற்காசசியா கேட்வே டேமினல்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொமேஷ் டேவிட், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் அசல வீரக்கோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

Fri, 03/01/2019 - 13:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை