இஸ்ரேல் நீதிமன்ற உத்தரவை அல் அக்ஸா நிர்வாகம் மறுப்பு

ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் உள்ள ஒரு பகுதியை மூடும்படியான இஸ்ரேல் நீதிமன்றத்தின் உத்தரவை அந்த பள்ளிவாசலின் முஸ்லிம் அறக்கட்டளை நிராகரித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேலால் மூடப்பட்டிருந்த பாப் அல் ரஹ்மா என்று அழைக்கப்படும் பகுதி கட்டிடத்தை முஸ்லிம் வழிபாட்டாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்ததைத் தொடந்து இஸ்ரேல் பொலிஸார் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு இடையில் மோதல் நீடித்து வருகிறது.

இந்த பகுதியை தொடர்ந்து மூடி வைப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று முஸ்லிம் அதிகாரிகள் வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் மூடப்படும் உத்தரவு விலக்கப்படுவதற்கான விளக்கத்தை அளிக்கும்படி முஸ்லிம் அறக்கட்டளைக்கு ஜெரூசலம் நீதிமன்றம் ஒன்று மார்ச் 10ஆம் திகதி வரை கெடு விதித்துள்ளது. “அல் அக்ஸா மற்றும் பாப் அல் ரஹ்மா விடயத்தில் ஆக்கிரமிப்பு நீதிமன்றத்திற்கு நாம் பதில் கூறப்போவதில்லை” என்று இந்த இஸ்லாமிய அறக்கட்டளையின் தலைவர் ஷெய்க் அப்தல் அஸீஸ் செல்ஹாப் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை