இஸ்ரேல் துருப்புகளால் இரு பலஸ்தீனர் சுட்டுக் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் முக்கிய மதத் தலம் ஒன்றுக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலிய படையினருடனான மோதலில் இரு பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தின நகரான நப்லூசுக்கு அருகில் இருக்கும் ஜோசப் கல்லறை அமைந்துள்ள மதத் தலத்திற்கு அருகில் இஸ்ரேல் துருப்புகளால் 21 வயது ரயித் ஹம்தான் மற்றும் 20 வயது செயித் நூரி ஆகிய இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மதத் தலத்திற்கு வந்த யூத வழிபாட்டாளர்கள் மீது வாகனம் ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் வீசப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அந்த வாகனத்தின் மீது சூடு நடத்தப்பட்டது” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இஸ்ரேல் தரப்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விவிலியத்தில் கூறப்படும் யாக்கோபின் 12 மகன்களில் ஒருவரான ஜோசப்பின் கல்லறை இங்கு இருப்பதாக யூதர்கள் நம்புகின்றனர்.

எனினும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஷெய்க் யூசர் ட்வைகத் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு அடக்கம் செய்யப்பட்டதாக பலஸ்தீன முஸ்லிம்கள் நம்புகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த பகுதி மேற்குக் கரையில் பலஸ்தீன அகதி முகாமுக்கு அருகில் உள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்புடன் யூத யாத்திரிகர்கள் இங்கு வருவது அடிக்கடி மோதலை ஏற்படுத்தி வருகிறது.

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை