கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசு ஒருபோதும் இணங்கவில்லை

கலப்பு நீதிமன்றத்தையோ அல்லது சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட பொறிமுறையொன்றை அமைப்பதற்கோ அரசாங்கம் ஒருபோதும் இணங்கவில்லையென அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கலப்பு நீதிமன்றத்தையோ அல்லது சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட பொறிமுறையொன்றை அமைப்பதற்கோ அரசாங்கம் ஒருபோதும் இணங்கவில்லை.

2017ஆம் ஆண்டு 30/1, 34/1, 40/1 கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.

2017ஆம்ஆண்டுமார்ச் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது, அரசியலமைப்புக்கு உட்பட்டதாக உள்ளக நீதிமன்றம் அமைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

தேர்தல் வரவுள்ளதால் ஜெனீவா விடயத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பற்றியும் பேசி மக்களைப் பயப்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே எமது நோக்கமாவுள்ளது. சிங்கள தாயின், தமிழ் தாயின் அல்லது முஸ்லிம் தாயின் பிள்ளை யார் உயிரிழந்தாலும் சகலருக்கும் இரத்தமே வரும்.

மக்களை ஏமாற்றுவதற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்துகொண்டே செயற்பட வேண்டும். நாட்டிலுள்ள சகல இனத்தவர்களும் சமமானவர்களாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு முதுகொலும்பு இருக்க வேண்டும் என்றார்.

Wed, 03/27/2019 - 10:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை