வத்திக்கானின் இரகசிய ஆவணங்கள் வெளியீடு

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பாப்பரசராக இருந்த பன்னிரண்டாவது பியூஸ் பாப்பரசரின் இரகசிய ஆவணங்களை ரோமன் கத்தோலிக்க திருச்சபை திறந்துவிடப்போவதாக பாப்பரசர் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

1939 தொடக்கம் 1958 ஆம் ஆண்டு வரை பாப்பரசராக இருந்த பன்னிரண்டாவது பியூஸ், ஜெர்மனி நாஜிக்களின் எழுச்சியை சகித்துக் கொண்டதாகவும், யூத படுகொலையில் இருந்து அவர்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவராவார்.

எனினும் யூதர்களை பாதுகாக்க அவர் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆவணங்களை பெறுவதற்கு முழு அனுமதியை யூதக் குழுக்கள் நீண்ட காலமாக கோரி வரும் நிலையில் இந்த முடிவை வரவேற்றுள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஆவணங்கள் திறந்துவிடப்படும் என்று பாப்பரவர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். பியூசின் மரபு “பாரபட்சம் மற்றும் மிகைப்படுத்தல்களால்” அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை