மட்டு. வைத்தியசாலை சிற்றூழியர் போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சிற்றூழியர் ஒருவர், வைத்தியசாலைக் கட்டிடத்தின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 

குறித்த வைத்தியசாலையில்  சிற்றூழியராகக் கடமையாற்றிவரும் தனக்கு, பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கையாள்வதற்காகப் பாதுகாப்புக் கை உறைகள் உள்ளிட்டவற்றை வழங்கக் கோரியே இன்று (21) காலை இவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர் தெரிவிக்கையில், "நீண்டகாலமாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்  கூடத்தில் சிற்றூழியராக நான்  கடமையாற்றி வருகின்றேன். இங்கு பயன்படுத்தப்பட்டு அகற்றப்படும் உபரணங்களைக் கையாள்வதற்காகப்  பாதுகாப்புக் கை உறைகள் உள்ளிட்டவற்றை வழங்குமாறு பல தடவைகள் நான் கோரிய போதிலும், வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியம் செய்து வந்துள்ளது. இதனாலேயே போராட்டம் நடத்த வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது" என்றார்.

மேலும், தனக்கான மேலதிக நேரக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சிற்றூழியர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், குறித்த சிற்றூழியருடன் வைத்தியசாலை நிர்வாகத்தின் கலந்துரையாடி அவரின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த சிற்றூழியர் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

(எம்.எஸ்.நூர்தீன் புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Fri, 03/22/2019 - 16:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை