கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது ஐ.தே.கவுக்கு சவாலல்ல

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் அல்ல என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சிறுபான்மை கட்சிகளின் வாக்குகளை வெற்றிகொள்வதற்கு அந்த வேட்பாளரினால் முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர், சிறுபான்மையினருடன் ஒரே மேசையில் உணவருந்தினாலும் கடந்த அரசு காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ சிறுபான்மை மக்களுக்கு இழைத்துள்ள அநீதிகளை அவர்கள் மறக்கமாட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு உள்ள சிறந்த எதிர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷதான். இதற்கிணங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அவகாசம் ஐக்கிய தேசிய முன்னணிக்கு அதிகமாக உள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் பொது வேட்பாளர் முன்பிருந்தே அரசியலை ஆரம்பித்திருக்க வேண்டும். 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இருந்த ஜனாதிபதி தெற்கு வாக்குகளின் மூலம் மட்டுமே வெற்றிபெற முடியும் என நம்பிக்கை வைத்திருந்தாலும் அதனை தோற்கடிப்பதற்கு எம்மால் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இனவாதம், மதவாதம், குலவாதத்திற்கு மக்கள் இனியும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை