செல்பி எடுக்க முயன்ற பெண் கருஞ்சிறுத்தை தாக்கி காயம்

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஸுக்கு அருகே உள்ள மிருகக் காட்சிசாலையில் செல்பி எடுக்க முயன்ற பெண்ணைச் கருஞ்சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.

கைத்தொலைபேசியில் பதிவான வீடியோவில் செல்பி எடுக்க பெண் ஒருவர் கருஞ்சிறுத்தை இருந்த கூண்டின்மேல் ஏறுவது தெரிகிறது.

அப்போது அவரின் கையை கருஞ்சிறுத்தை அதன் நகங்கள் கொண்டு தாக்கியது. கருஞ்சிறுத்தையின் கவனத்தைத் திசைதிருப்ப மற்றொரு பெண் தமது தண்ணீர் போத்தலைக் கூண்டிற்குள் வீசினார்.

அதைத் தொடர்ந்து கருஞ்சிறுத்தை போத்தல் பக்கம் சென்றது. தாக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு அச்சுறுத்தும் காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை