நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: துருக்கி நாட்டவர் ஒருவர் கைது

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் இதற்கு காரணமான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். அதில் சிலருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளது.

37 வயதான கோக்மென் டானிஸ் என்ற அந்த துருக்கி நாட்டு நபர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் இருந்த ஒரு கட்டடத்தில் சம்பவம் நடந்த பல மணி நேரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரியின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் முன்னர் செச்சன்யா குடியரசில் நடந்த போராட்டங்களில் பங்குபெற்றவர் என்று துருக்கி தொழிலதிபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் குழுவுடன் தொடர்பு இருந்ததாக கோக்மென் டானிஸ் முன்னர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்றும் அந்த தொழிலதிபர் ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை