இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்

AMF

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கேட்டுக் கொள்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Wed, 03/06/2019 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை