ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தவறுகளை நிவர்த்திக்க வேண்டும்

ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தவறுகளை நிவர்த்தி செய்வதற்கு சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டுமென உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சுக்களிலிருந்து அனுப்பப்படும் விடயங்களுக்கு ஏழு அல்லது எட்டு மாதங்கள் கழிந்தும் ஆணைக்குழுக்களிலிருந்து பதில் பெற முடியாதநிலை உள்ளதாகவும் இதனால் அமைச்சுக்களின் செயற்பாடுகளில் பெரும் அசெளகரியம் ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கிணங்க சபாநாயகருக்கூடாக இது தொடர்பில் ஆராய்ந்து விபரயங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

ஆணைக்குழுக்களை நாமே உருவாக்கினோம். அதன்மூலம் நல்லதை போலவே கெட்டதும் நிகழ்கின்றது. அனைத்து ஆணைக்குழுக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட வேண்டும். ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கூடாக வழங்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பான வழிகாட்டியை வழங்க வேண்டுமே தவிர கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அதற்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க எம்.பி முஜிபுர் ரஹுமான்

போதையொழிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி மட்டும் முன்னெடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியே அதற்கான அத்திவாரத்தை ஏற்படுத்தியது.

எனவே இதன் பெருமை நல்லாட்சி அரசாங்கத்துக்கு உரியது. அதனை ஒருவருக்கு மட்டும் உரித்துடையதாக்குவது முறையல்ல.

கடந்த காலங்களில் வீட்டுக்கு போகும் வழியில்தான் பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த முறைமை 19 வது அரசியலமை்பு முறைமூலமே தீர்க்கப்பட்டன. ஆணைக்குழுக்கள் மற்றும் அரசியலமைப்பு சபையில் குறைபாடுகள் இருக்கலாம். எனினும் இன்று உலக நாடுகள் ஏற்கும் வகையில் நாம் நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பாரிய சதித்திட்டம் தீட்டப்பட்டது. அவ்வாறான ஜனாதிபதி செயலகத்துக்கு நிதி ஒதுக்குவதற்கு நாம் விரும்பவில்லை. நாம் நிதியை ஒதுக்கி கொடுக்க அவர் மீண்டும் எமக்கு எதிராக சதி திட்டம் தீட்டலாம் எனும் எண்ணத்தில் தான் அந்த ஒதுக்கீட்டை நிராகரிப்பதற்கு நாம் தீர்மானித்தோம்.

ஜனாதிபதி தான் கூறுவதை அரசியல் கட்சியிலுள்ள எவரும் கேட்பதில்லையெனக் கூறி கவலைபடுகின்றார். அவ்வாறு கவலைபடுவதில் அர்த்தமில்லை. அதற்கு பதிலாக ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்தி அவர் சொல்வதைக் கேட்கும் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.

போதையொழிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி மட்டும் முன்னெடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியே அதற்கான அத்திவாரத்தை ஏற்படுத்தியது. எனவே இதன் பெருமை நல்லாட்சி அரசாங்கத்துக்கு உரியது . அதனை ஒருவருக்கு மட்டும் உரித்துடையதாக்குவது முறையல்ல.

கடந்த காலங்களில் வீட்டுக்கு போகும் வழியில் தான் பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த முறைமை 19 வது அரசியலமை்பு முறைமூலமே தீர்க்கப்பட்டன. ஆணைக்குழுக்கள் மற்றும் அரசியலமைப்பு சபையில் குறைபாடுகள் இருக்கலாம். எனினும் இன்று உலக நாடுகள் ஏற்கும் வகையில் நாம் நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பாரிய சதித்திட்டம் தீட்டப்பட்டது. அவ்வாறான ஜனாதிபதி செயலகத்துக்கு நிதி ஒதுக்குவதற்கு நாம் விரும்பவில்லை. நாம் நிதியை ஒதுக்கி கொடுக்க அவர் மீண்டும் எமக்கு எதிராக சதி திட்டம் தீட்டலாம் எனும் எண்ணத்தில் தான் அந்த ஒதுக்கீட்டை நிராகரிப்பதற்கு நாம் தீர்மானித்தோம். ஜனாதிபதி தான் கூறுவதை அரசியல் கட்சியிலுள்ள எவரும் கேட்பதில்லையெனக் கூறி கவலைப்படுகின்றார். அவ்வாறு கவலைபடுவதில் அர்த்தமில்லை. அதுக்கு பதிலாக ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்தி அவர் சொல்வதைக் கேட்கும் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.

சுதந்திரக் கட்சி எம்.பி டிலான் பெரேரா

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளது. எனினும் சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ மக்களுக்காக சிந்தித்து தீர்மானம் எடுப்பதில்லை. தமது சொந்த தேவைகளுக்காக ஐ.தே.கவுடன் டீல் செய்து கொண்டுள்ளனர்.

தேசிய அரசாங்க காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இருந்த சந்தர்ப்பத்தை இத்தகைய டீல்களுக்கு முன்னுரிமை கொடுத்தே தவறவிட்டுள்ளனர்.

 

ஐ.ம.சு.மு எம்.பி பைசர் முஸ்தபா

மாகாணசபை தேர்தல் தாமதமாவதற்கு என்னை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததற்கு நான் என்ன செய்ய முடியும்? தேர்தலை மீண்டும் பழைய முறையில் நடத்துவதென அனைவரும் தீர்மானித்துள்ளார்கள்.

அதற்கான சட்டமூலத்தில் சிறியதொரு திருத்தத்தையே முன்னெடுக்க ​வேண்டும். ஆனால் அதனை தாமதிப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்?

பிறரை குற்றம் சுமத்துவது இலகுவான விடயம். தேர்தல் தாமதமாவதற்கு எந்தவகையிலும் நான் காரணமாக மாட்டேன். பாராளுமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்.

19 ஆவது அரசியலமைப்பின் நன்மைகளை நாம் அனைவரும் அனுபவிக்கின்றோம்.

அதற்காக ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

 

சு.க எம்.பி மஸ்தான்

வடக்கில் சிறுவர்கள் போதைவஸ்துக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த போதையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுபான்மையினர் நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றனர். எல்லை நிர்ணயம் சரியான முறையில் முன்னெடுக்க ​வேண்டும்.

நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுத்த வேண்டும்.

Thu, 03/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை