அரச ஊழியர், ஓய்வூதியர் கொடுப்பனவு அதிகரிப்பு

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை ரூ.6000 கொடுப்பனவு

அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத்திட்டம் நேற்று (05) நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அரச ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்கள் ஆகியோருக்கு கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

காணாமல்போனோரின் உறவினர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அந்தக் குடும்பங்களுக்குத் தற்காலிகமாக மாதாந்தம் ஆறாயிரம் ரூபாய் கொடுப்பபனவு வழங்கவும் சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் தொகையை மேலும் ஆறு இலட்சத்தால் அதிகரிக்கவும், புதிதாகத் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதிகளுக்கு இலகு வட்டிக் கடனாக ஒரு கோடி ரூபாய் வீடமைப்புக் கடன் பெற்றுக்ெகாடுக்கவும், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் பல்வேறு கடன் திட்டங்களையும் அமைச்சர் முன்மொழிந்துள்ளார். நிதியமைச்சரின் முழுமையான முன்மொழிவுகள் வருமாறு...

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை