பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்க முயற்சிப்பதே சிறந்தது

'ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பவர்கள் யாரென்பது வரவு செலவுத்  திட்ட வாக்களிப்பின்போது தெரிந்துவிட்டது' என்று கூறுகிறார் மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டவல

'ஜெனீவா கதை' என்பது காலத்துக்குக் காலம் வருகின்ற வாதநோய் போன்றது. சில நாட்களில் அது மறைந்து போய்விடும்.

ஐ.தே.கவை தாங்கிப்பிடிப்பது யாரென்பது இப்போது புரிகிறதல்லவா? ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதில் பிரதான கட்சிகள் மத்தியில் சிக்கல்!

கேள்வி: உங்கள் கட்சி கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியது. அது வெற்றி பெற்றதா? 

பதில்: ஆம். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிறைவேற்று ஜனாதிபதியா, நிறைவேற்று பிரதமரா இருக்க வேண்டும் என்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அவர்கள் கூறுவதெல்லாம் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணும் முறையே தேவை என்பதாகும். 

கேள்வி: அரசுடனும் ஏனைய கட்சிகளுடனும் உங்கள் கட்சி இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துமா? 

பதில்: ஆம், நாம் அதற்காக ஏற்கனவே நாட்களை ஒதுக்கியுள்ளோம். 

கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வேளையிலேயே நீங்கள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்க வேண்டுமென்று கடந்த வாரம் நுகேகொடயில் கூட்டமொன்றை நடத்தினீர்கள் அல்லவா?

பதில்: இதன் மூலம் மக்களிடையே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகுமல்லவா? 

கேள்வி: பிரதான கட்சிகள் தற்போதே ஜனாதிபதியாக போட்டியிட வேட்பாளர்களை தெரிவு செய்து வருகின்றன. அவர்கள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க முன்வருவார்களா?  

பதில்: உண்மையில் பிரதான அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களை தெரிவு செய்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன. 18இலட்சம் பேரை வைத்துக் கொண்டு ஜனாதிபதியாக முடியாது. மஹிந்த ராஜபக்ஷவால் மீண்டும் போட்டியிட முடியாது. ரணில் விக்கிரமசிங்க பக்கத்தை நோக்கினால் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற புரட்சி அவர்களுக்கு அனுகூலமான ஒன்றென எண்ணுகின்றார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காது. அதனால் நாம் அனைவரும் மதிக்கும் பாராளுமன்றத்துக்கு அதிகாரமளிக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்ததாகும். 

கேள்வி: ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியினர் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மாத்திரம்தான் நடைபெறும் என்று கூறுகின்றார்களே? 

பதில்: அவர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த மாட்டார்கள். அவ்வாறு நடத்தினால் கிராமப்புற மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனத் தெரியும், அதனால் தற்போதுள்ள அரசியல் சூறாவளியில் நன்மையடைய முயற்சி செய்கின்றார்கள்.  

கேள்வி: வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து நீங்கள் பாராட்டு தெரிவிக்கவில்லையே? 

பதில்: அவர்கள் கூறும் எந்த சலுகைகளும் உண்மையில் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை. மக்கள் மீது வரியும் அபராதமுமே சுமத்தப்பட்டுள்ளது. 

கேள்வி: ஜெனீவா கதை மீண்டும் வந்துள்ளது. எமது நாட்டின் அரசியல் கட்சிகள் இது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன அல்லவா? 

பதில்: மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் வரை மின்சார கதிரையைப் பற்றி கூறினார்கள். அவருக்கு மின்சார நாற்காலிக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. முப்படைகளுக்கும் அவ்வாறே காலத்துக்குக் காலம் வாதநோய் போன்று இன்னும் சில நாட்களில் அதுவும் காணாமற் போய் விடும். 

கேள்வி: வரவு செலவு திட்ட வாக்களிப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை தவிர்த்து விட்டார்களே. இந்நிலைமையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? 

பதில்: இதிலிருந்தே தெரிகிறதல்லவா அவர்களுடைய இரட்டைப் போக்கு. இப்போது புரிகின்றதல்லவா  ஐ. தே. கட்சியை தாங்கிப் பிடிப்பவர்கள் யாரென்று? மக்கள் விடுதலை முன்னணியையே ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றுகின்றார்கள் என்று கைகாட்டினார்கள். 

கேள்வி: பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து இந்நாட்களில் அனைவரும் பேசுகின்றார்களே...

பதில்: அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்ய்பபட்டுள்ள மக்கள் உரிமையொன்றை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுக்க எண்ணுகின்றார்கள் என்றால் அதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர்தான் முதலில் எதிர்ப்பைத் தெரிவிப்போம். மக்களின் பேராட்ட உரிமையைத் தடுத்து கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை அரசாங்கத்துக்கு தேவையானவாறு தடுத்து நிறுத்தும் குறுகிய நோக்கத்தியே இச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  

கேள்வி: மன்னார் புதைகுழி எலும்புக் கூடுகளின் கால நிர்ணயத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாரே...

பதில்: காலநிர்ணய அறிக்கை நாம் தயாரித்ததல்ல. அதை தயாரித்தது அமெரிக்காவாகும். உண்மையில் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாவை சேனாதிராஜா போன்றோரின் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சி என்றே இதனைக் கூறலாம். அவர்கள் யுத்த சமயத்தில் நடந்ததென்று கூறி இராணுவத்தின் மீது பழிசுமத்த முயற்சிக்கின்றார்கள்.

(தாரக விக்ரமசேகர)

(சிலுமின)

Wed, 03/20/2019 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை