நஞ்சற்ற உணவு விற்பனை நிலையங்களை பாடசாலைகளில் அமைக்க நடவடிக்கை

இயற்கையான  நஞ்சற்ற உணவு உற்பத்தி விற்பனை நிலையங்களை பாடசாலைகளில் அமைக்க விவசாயத்துறை அமைச்சர் திரு.பீ..ஹெரிசன் நடவடிக்கை எடுத்துள்ளார்.   சேதனப்பசளையைக் கொண்டு உற்பத்திசெய்யப்பட்ட மரக்கறி வகைகள், பழவகைகள் போன்ற போசாக்கு நிறைந்த உணவுகள் அடங்கியதாக இந்த விற்பனை நிலையம் அமைந்திருக்குமென விவசாயத்துறை தெரிவித்துள்ளது.  

"சுகார" என்ற பெயரில் விற்பனை நிலையங்களை பாடசாலைகளில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விவசாயத்துறை அமைச்சு செய்துவருகின்றது.  

 போசாக்கு நிறைந்த உணவுகளை மாணவர்கள் உட்கொள்ளவும், தொற்றா நோய்களிலிருந்து அவர்களை பாதுகாக்கவுமே மேற்படி திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.  

அண்மைக்காலமாக சுமார் 9மாணவர்கள் தொற்றா நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  

தொற்றா நோயினை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யும் திட்டம் பாடசாலையில் இருந்தே ஆரம்பிக்கப்படும் எனவும் அமச்சர் திரு.பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.  

 (நேகம்பஹ தினகரன் நிருபர்)  

Sat, 03/16/2019 - 08:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை