எண்ணெய் நாடுகளின் முக்கிய மாநாடு ரத்து

ஒபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகளின் அமைப்பும், முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளும் அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்த சந்திப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அதனால், எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில் அவை உற்பத்தியைக் குறைக்கும் நடவடிக்கை ஜூன் மாதம் வரை நடப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் தொடர்பிலான ஒப்பந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணிக் குழு மே மாதம் சந்திக்கும்.

அதன் பின்னர் ஜூன் 25ஆம் திகதி அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் சந்திப்பர். உற்பத்திக் குறைப்பை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிப்பது குறித்து அப்போது முடிவெடுக்கப்படும்.

இந்த ஆண்டின் முற்பாதி வரை தேவைப்படும் எண்ணெய் சந்தையில் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டிருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக சவூதி அரேபியாவின் எரிசக்தித் துறை அமைச்சர் கூறினார்.

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை