ஹமீத் அல்- ஹூசைனி, களுத்துறை முஸ்லிம் மத்திய, இசிபத்தான, திஹாரி அல்-அஸ்கர் கல்லூரிகள் இன்று அரையிறுதியில் மோதல்

ஹமீத் அல் --ஹூசைனி கல்லூரியின் 80 ஆவது குழுவின் ஏற்பாட்டில் 12 ஆவது அழைப்பு பாடசாலைகளுக்கு இடையிலான ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று 30 ம் திகதி களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியுடன் திஹாரி அல்-அஸ்கர் கல்லூரி அணியும் கொழும்பு குதிரை பந்தய திடல் மைதானத்தில் மோதுகின்றன.இந்த போட்டி மாலை 2 மணிக்கு இடம்பெறுகிறது.

அத்துடன் இதே மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஹமீத் அல்--ஹூசைனி கல்லூரி மற்றும் கொழும்பு இசிபத்தான கல்லூரி அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இதே மைதானத்தில் இடம்பெறுகின்றன.

கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி சென். பெனடிக் கல்லூரி அணிகள் மோதிய ஆட்டத்தில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி 1--0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவானது.அத்துடன் கொழும்பு ஹமீத் அல்--ஹுசைனி அணி கல்கிஸை சென் தோமஸ் அணியை 3--1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியே அரையிறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இந்த சுற்றுப் போட்டியில் 19 பாடசாலை அணிகள் பங்கேற்றன.அத்துடன் உதைபந்தாட்ட போட்டியில் பங்கேற்ற பாடசாலை அணிகளுக்கு உதைபந்துகள் வழங்கப்பட்டன.

அரையிறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் , கல்லூரி அதிபர் ,பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் திகதி 4 மணிக்கு கொழும்பு குதிரை பந்தய த்திடல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்னர் என 80 ஆவது குழுவின் செயலாளர் பஸ்மின் பாயிஸ் தெரிவித்தார்.

 பரீத் .ஏ .றகுமான்

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை