இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனீவாவில் விரிவான விளக்கம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் செயலாளர் நாயகம் ஆகியோரை ஜெனீவாவில் சந்தித்திருந்த இலங்கை தூதுக் குழுவினர், இலங்கை விவகாரம் தொடர்பில் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் கடந்த 20ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டைச் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது இலங்கைக் குழுவினருக்கு சிறந்த வரவேற்பளித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், 30/1 பிரேரணையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில்

 இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதாக உறுதியளித்தார். இலங்கைத் தூதுக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அனுமுகம, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்,

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அசீஸ் ஆகியோர் அங்கம் வகித்தனர். மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் குறித்து ஐ.நா ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் வேறுபாடுகள் பற்றியும் அக்குழுவினர் எடுத்துக் கூறியுள்ளனர் உள்ளூர் மற்றும் தேசிய மனித உரிமைகள் அமைப்புக்களுட னும் கலந்துரையாடி இது தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம் கடந்த 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிச் செயலாளர் நாயகத்தையும் இக்குழுவினர் சந்தித்துள்ளனர். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள், சமாதானத்தைக் கட்டியெழுப் புவதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தலைமைத்துவம் ஐ.நாவின் முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்த எடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், சமூகப் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த, தனது அலுவலகம் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்ற உறுதிமொழியையும் வழங்கியிருந்தார்.

Mon, 03/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை