மைக்கல் ஜக்சன் பாடல்களை ஒலிபரப்ப வானொலிகள் தடை

காலஞ்சென்ற பொப் இசைப்பாடகர் மைக்கல் ஜன்சன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தும் ஆவணப்படம் ஒன்று வெளியானதை அடுத்து அவரது பாடல்களை ஒலிபரப்புவதை உலகின் பல வானோலி நிலையங்களும் நிறுத்திக் கொண்டுள்ளன. இந்த வரிசையில் கனடா மற்றும் நியூசிலாந்தின் முன்னணி வானொலி நிலையங்களும் அவரது பாடல்களை நிறுத்தி இருப்பதாக சி.என்.என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படம் கடந்த ஞாயிறுக்கிழமை தொடக்கம் எச்.பி.ஓ. தொலைக்காட்சி ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது. இதில் வடா ரொப்சன் மற்றும் ஜேம்ஸ் சேப்சன் என்ற இருவர் தாம் சிறுவர்களாக இருந்தபோது மைக்கல் ஜக்சன் பல ஆண்டுகளாக தம்மீது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாக மைக்கல் ஜன்சன் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இது கொச்சையான வியாபார நாடகம் என்று ஜன்சனின் குடும்பத்தினர் விமர்சித்துள்ளனர்.

பொப் பாடல் உலகின் மன்னர் என்று அழைக்கப்பட்ட மைக்கல் ஜன்சன் 2009 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை