வட மேல், வடக்கு, திருமலையில் வெப்பநிலை எச்சரிக்கை

வடமேல் மாகாணத்திலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், அம்பாந்தோட்டை, மொணராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினம் வெப்ப நிலை உயர்வாக காணப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக அதிக களைப்பு மற்றும் தசை நார் பிடிப்பு, அதிக வெப்பத்தினால் பக்கவாதம் (Heat stroke)  என்பன இடம்பெற வாய்ப்பு இருப்பதனால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் வேலை செய்பவர்கள் அடிக்கடி நீராகாரங்களை பருகுவதுடன் நிழலான இடங்களில் இளைப்பாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வயோதிபர்கள் மற்றும் சுகயீனமுற்றவர்களின் உடல்நிலை குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும், பிள்ளைகளை கவனிப்பாரற்று விட வேண்டாமென்றும் பிள்ளைகளை தனியே வாகனங்களுக்குள் வைத்துவிட்டுச் செல்லவேண்டாமென்றும், அதிக வெயில் சுட்டெரிக்கும் வெளியிடங்களில் செயற்பாடுகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Mon, 03/25/2019 - 15:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை