உயர் விசாரணைக் குழுவுக்கு நியூசிலாந்து பிரதமர் உத்தரவு

நியூசிலாந்தில் 50 பேர் கொல்லப்பட்ட கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணை ஒன்றுக்கு அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை பொலிஸார் மற்றும் உளவுப் பிரிவுகளால் தடுக்க முடியுமாக இருந்ததா என்பது பற்றி இந்த ரோயல் ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து சட்டத்தின்படி உயர்பட்ட சுயாதீன விசாரணைக் குழுவாக ரோயல் ஆணைக்குழு உள்ளது. அது விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று ஆர்டன் குறிப்பிட்டார்.

ஒரு துப்பாக்கிதாரி எவ்வாறு 50 பேரைச் சுட்டுக்கொன்றார் என்பதைத் தெரிந்துகொள்ள தாம் விரும்புவதாக அவர் கூறினார். இப்படியொரு பயங்கரவாதம் எவ்வாறு நடந்தது என்பதும் எதிர்காலத்தில் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை