தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருந்தால் கவலையடைகிறேன்

ஐ.நா ம.உ ஆணையருக்கு வட மாகாண ஆளுநர் விளக்கம்

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கூட்டத் தொடரில் தான் பங்குபற்றியமை தொடர்பாக வழங்கிய ஊடக நேர்காணலில் குறிப்பிட்ட சில விடயங்கள் விசேடமாக ஆங்கில மொழி ஊடகங்களில் அதன் மூல அர்த்தம் மாறுபடும் வகையில் பிரசுரமாகயிருந்ததையிட்டு மிகவும் கவலையடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் நான் பங்குபற்றியமை தொடர்பாக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்ததாகவும், அது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்திருந்த எதிர்விளைவு தொடர்பாகவும் சில ஊடகங்களில் அறிக்கை வெளியிடப்பட்டமை தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அந்த நேர்காணலின் சில பகுதிகள் குறிப்பாக ஆங்கில மொழி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் மூல மொழியின் அர்த்தம் மாறுபட்டுள்ளமை கவலை தருவதாக உள்ளது. அத்துடன் தனது நோக்கம் மொழி பெயர்ப்பு காரணமாக அல்லது தெரியாத வேறு காரணங்களினால் மாறியுள்ளமை துரதிர்ஷ்டவசமானதாகும் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் உயர் ஸ்தானிகர் மற்றும் ஒட்டுமொத்த ஊழியர் குழு ஆகியோர் பெருமளவு உதவியாக இருந்தனர். அத்துடன் அவர்கள் தொழில்சார் ரீதியிலும் நட்புறவுடன் பழகினார்கள் என்பதை முன்னர் எழுதியிருந்ததைப் போன்று மீண்டும் ஒரு முறை நான் உறுதிடக் கூறுகிறேன்.

எமது சந்திப்புகள் ஆகக்கூடிய நட்புடன் கூடிய ஒத்துழைப்புடனும் நல்லெண்ணத்துடனும் நடைபெற்றன. நாங்கள் அனைவரும் ஒன்றாக செயற்பட்டதுடன் யுத்தத்துக்கு பின்னர் இலங்கையில் அமைதி திரும்பவும் ஜனநாயகம் நிலவும் கலந்துரையாடினோம் என்று தனது அறிக்கையில் ஆளுநர் மேலும் கூறுகிறார்.

எமது வேற்றுமைகள் தொடர்பாக நாம் கலந்துரையாடியது உண்மைதான் அத்துடன் அவற்றுக்கான அடிப்படை காரணங்கள், அவற்றை கூட்டாக எதிர்கொள்வது எப்படி என்பவற்றை நாம் இருதரப்பு மரியாதைக் கேற்ப பகிர்ந்து கொண்டோம்.

மேற்படி சந்திப்புகள் தொடர்பாக எந்தவொரு தப்பபிப்பிராயமோ தவறான அறிக்கை விடவோ இடம்பெற்றிருந்தால் அதனையிட்டு நான் கவலைப்படுகிறேன். சீமாட்டி பெச்லே ஒரு உயர்வான உயர் ஸ்தானிகர் அவர் அதிக பட்ச ராஜதந்திரமும் நான் மதிக்கும் அளவிலான திறமையும் கொண்டவர் என்று ஆளுநர் சுரேன் ராகவன் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை