வடகொரிய தேர்தல்: கிம் பெயர் இல்லை

வட கொரியாவின் புதிதாய்த் தேர்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலில் அந்நாட்டுத் தலைவர் கிம் ஜொங் உன்னின் பெயர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் உச்சத் தலைவர் பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 687 உறுப்பினர்களின் பெயர்கள் வானொலியில் வாசிக்கப்பட்டன. ஆனால், கிம் ஜொங் உன்னின் பெயர் வாசிக்கப்படவில்லை.

கிம் ஜொங் உன்னின் தந்தையும் தாத்தவும் ஒரே நேரத்தில் நாட்டின் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தனர். ஒரு சாதாரண நாட்டின் தலைவராகத் தம்மைக் காட்டிக்கொள்ளத் கிம் முயற்சி செய்யக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். புதிய உறுப்பினர் பட்டியலில் அவரது தங்கை கிம் யோ ஜொங்கின் பெயர் உள்ளது.

Thu, 03/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை