இந்து மக்களின் வாழ்வு பிரகாசிக்கட்டும்!

சிவராத்திரி செய்தியில் ஜனாதிபதி

சிவராத்திரி விரத அனுஷ்டானத்தின் வழியாக இந்து மக்களின் இதயங்களில் ஒளி பிரகாசித்து, அவர்கள் நல்வாழ்வு வாழவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  

ஒரே மனித குடும்பத்தின் சொந்தங்களாகிய நாம் கொண்டிருக்கும் தனித்துவ அடையாளங்களுக்கு அப்பால் ஆன்மீகம் என்ற நிலையில் அனைவரும் ஒரே மனித குடும்பமாக இணைந்திருக்க முடியும் என்பதே மானிடத்துவத்தின் மாகிமையாகும். அந்த மானிடத்துவத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களாகவே கலாசாரங்கள் அமைகின்றன. அந்த வகையில் மதம் என்பது அந்த கலாசாரத்தின் அஸ்திவாரமாகும்.

தற்கால அதிவேக சமூகத்தினால் ஏற்படுத்தப்படுகின்ற மன அழுத்தம் காரணமாக முன்னொருபோதும் இல்லாத அளவில் இந்த சமூகம் ஆன்மீக ஒழுக்கத்தை நாடிச் சென்று கொண்டிருக்கின்றது.

ஏனெனில் தியானமே மனிதனை ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்தும் வழியாக அன்று தொட்டு இருந்து வருவதே அதற்கு காரணமாகும்.

உலக வாழ் இந்து மக்கள் தமது முதன்மை படைப்பாளியாக கருதும் சிவபெருமானுக்காக நித்திரையை தவிர்த்து விரதம் இருந்து தியானத்தின் மூலம் தமது ஆன்மீக ஒழுக்கத்தை அடைவதற்காக செயற்படும் ஒரு மத ரீதியான புனித நாளாகவே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.  

நமது தாய் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் வாழ்ந்து வருகின்ற இந்து பக்தர்களின் அந்த ஆன்மீக பிரார்த்தனை நிறைவேறி, அவர்களின் வாழ்க்கை நல்வழிப்படும் பட்சத்தில் அது அவர்களுடன் இணைந்து வாழும் ஏனைய சமூகத்தவர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்றுவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உலகவாழ் இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளிபெற்று நல்வாழ்வு வாழ எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.       

Mon, 03/04/2019 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை