பல்வேறு திறமை வெளிக்காட்டிய வீரர் திலான் சமரவீர

ஒப்சேர்வர்- மொபிடெல் வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் விருது பாடசாலை வீரர்கள் பலரின் குறிப்பிட்ட இலக்காக இருந்து வருகிறது. அவ்வாறான ஒரு விருதை வெல்ல முடிந்தால் அது அந்த வீரரின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பதே அதற்குக் காரணமாகும்.

இவ்வருடத்துக்கான மேற்படி விருதுக்கான தெரிவுகள் இப்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. முக்கியமான முதலாவது தவணை கிரிக்கெட் போட்டிகளுடன் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த பாரிய போட்டிகளும் அடுத்த சில நாட்களில் இடம்பெறவுள்ளதால் விருதுகளை தெரிவுகள் முக்கிய கடடத்தை அடைந்துள்ளன.

கடந்த சில வாரங்களாக மேற்கூறிய விருதை வென்ற பாடசாலை வீரர்களைப் பற்றி நாம் எழுதி வந்தோம். ரஞ்சன் மடுகல்ல, அர்ஜுன் ரணதுங்க, ரொஷான் மஹானாம, அசங்க குருசிங்க, மார்வன் அத்தபத்து, முத்தையா முரளிதரன், குமார் தர்மசேன ஆகியோர் மேற்படி விருதை வென்றவர்களாவர். இவர்களைப் பற்றி நாம் எழுதி வந்திருக்கிறோம்.

இன்று நாம் மற்றொரு பிரபல கிரி்க்கெட் வீரரைப் பற்றிப்பேசப் போகிறோம். அவரது பெயர் திலான் சமரவீர, ஒப்சேவர்- மொபிடெல் வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை இவர் 1995 இலும் 1996இலும் வெற்றி பெற்றவர் ஆவார். 1976 செப்டம்பர் 22ஆம் திகதி கொழும்பில் பிறந்த திலான் சமரவீர ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். அதன்பின் அவர் இலங்கை அணியிலும் விளையாடினார்.

இலங்கை அணியில் அவர் நீண்ட நேரம் தனித்து நின்று விளையாடிய பல போட்டிகளில் அவரது துடுப்பாட்டம் பெரிதும் பேசப்பட்டது. அத்துடன் அவர் ஓப் ஸ்பின் பந்து வீச்சாளராகவும் விளையாடினார். பின்னாளில் இவர் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்தார். அத்துடன் ஐ. பி. எல். போட்டிகளில் 2018 ஆம் ஆண்டு கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

தனது டெஸ்ட் அனுபவம் பற்றி பேசும் போது: தனது துடுப்பாட்டத்தின்படி இலங்கைக்காக விளையாடிய வீரர்களில் தான் மூன்றாவது சராசரியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை அணியின் சிறந்த வீரர்கள் இருவரையடுத்து மூன்றாவது இடத்தில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது என்று திலான் சமரவீர கூறுகிறார்.

எனக்கு அதிக அழுத்தத்தை தந்த போட்டி எதுவென்று கேட்டால் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியாகும். எமக்கு ஆதரவு தர 35 ஆயிரம் ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். எனினும் எங்கள் இலங்கை அணி துரித கதியில் விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. எம்மை ஆதரிப்பதற்குப் பதிலாக ரசிகர்கள் எம்மை பார்த்து கூச்சலிட ஆரம்பித்தனர்.

எமது பிரபல துடுப்பாட்ட வீரர்கள் அவுட்டாகியிருந்தனர். அடுத்து பந்து வீச்சாளர்தான் துடுப்பெடுத்தாட மிஞ்சியிருந்தனர். எனினும் நானும் அஞ்சலோ மெத்தியூசும் சேர்ந்து எங்கள் அணியை வெற்றி பெறச் செய்தோம் என்று சமரவீர கூறினார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை இரண்டு தடவைகள் (1980, 1982) வென்ற திலான் சமரவீர.

நான் எஸ். எஸ். சி. கழகத்துக்காக விளையாடியபோது எங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் அர்ஜுன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நேரத்திலும் அவர் எஸ். எஸ். சி. கழக அணிக்காக விளையாடிய நேரங்கள் குறித்த நேரத்தில் மைதானத்துக்கு வருவதை அவர் பழக்கப்படுத்திக்கொண்டிருந்தார்.

திலான் சமரவீரவும் மற்றொரு இலங்கை பிரபலமுமான சந்திக ஹத்துருசிங்கவும் இலங்கை அணியை விட மற்றொரு ஆசியநாடான பங்களாதேஷ் அணியை வழி நடத்தியிருந்தனர்.

பங்களாதேஷ் அணியை சர்வதேச ரீதியில் பெருமை மிக்க அணிகளாக மாற்றிய கௌரவத்துக்கு உரியவர்கள் திலான் சமரவீரவும் ஹதுருசிங்கவும் ஆவர்.

ஆனந்தா கல்லூரியில் படிக்கும் போதே துடுப்பாட்டத்தில் திலான் திறமை காட்டியிருந்தார். 1994 மற்றும் 1995 இல் ஒப்சேர்வர் விருதை வெற்றி பெறுவதற்கு அவரது துடுப்பாட்டத் திறமைதான் காரணமாக அமைந்தது.

ஒப்சேர்வர் வருடாந்த சிறந்த பாடசாலை வீரர் விருது கடந்த 4 தசாப்தங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. இதில் 6 பேர் மட்டுமே இந்த விருதை இரண்டு தடவைகள் விருதை பெற்றுள்ளனர். இவ்வாறு இரண்டு தடவைகள் விருதை பெற்றவர்களில் அரை வாசிப்பேர் ஆனந்தாக்கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.

அர்ஜுன ரணதுங்க (1980 மற்றும் 1982) ரொஷான் மஹாநாம (1983 மற்றும் 1984) திலான் சமரவீர (1995 மற்றும் 1996) லாஹிரு பீரிஸ் (2004 மற்றும் 2005) பானுக ராஜபக்ஷ (2010 மற்றும் 2011) சரித் அசலங்க (2015 மற்றும் 2016) ஆகியோர் இரண்டு தடவைகள் மேற்படி விருதை வென்றவர்கள். இதில் அர்ஜுன ரணதுங்க, திலான் சமரவீர, லஹிரு பீரிஸ் ஆகியோர் ஆனந்தா கல்லூரியை சேர்ந்தவர்கள்.

இரண்டாவது தடவையாக விருதை வென்ற சமரவீர மூன்று வருடங்களுக்குள் இலங்கை அணியில் இடம் பிடித்தார்.

1998 இல் நவம்பர் 6ஆம் திகதி சார்ஜாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் போட்டியில் திலான் இலங்கைக்கான அறிமுகத்தை பெற்றார்.

அந்தப் போட்டியில் அவர் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும் பந்து வீச்சில் இந்திய விக்கெட் காப்பாளர் நயன் மொங்கியாவை ஆட்டமிழக்கச் செய்து அவரது முதலாவது சர்வதேச விக்கெட்டை சமரவீர பெற்றுக்கொண்டார்.

சமரவீரவின் டெஸ்ட் அறிமுகம் இந்தியாவுக்கு எதிராகவே அமைந்தது. எஸ் எஸ். சி. மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக மான திலான் அவரதுமுதல் போட்டியிலேயே சதத்தைப பெற்றார். எட்டாவது இலக்க பின்வரிசை ஆட்டக்காரராக களமிறங்கிய திலான் சமரவீர ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றார்.

அப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 610 ஓட்டங்களைப் பெற்றது. நான்கு வீரர்கள் சதம் பெற்றனர். மார்வன் அத்தபத்து (108) மஹேல ஜயவர்தன (13) ஹசான் திலகரத்ன (ஆட்டமிழக்காமல் (136) ஆகியோருடன் திலான் சமரவீர (ஆட்டமிழக்காமல் 103) ஓட்டங்கள் பெற்றனர்.

இலங்கைக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள திலான் சமரவீர 5462 மொத்த ஓட்டங்களை பெற்றுள்ளார். அதில் 14 சதங்களும், 30 அரைச்சதங்களும் உள்டங்குகின்றன. அத்துடன் இலங்கைக்காக 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 103 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அதிகபட்ச ஓட்டமாகப் பெற்றுள்ளார்.

2016 இல் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வருமுன் பரிஸ்பேனில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சிறிது காலம் திலான் பயிற்சியளித்தார். 2013இல் இங்கிலாந்தில் வூட்டர்ஷயர் கழக அணிக்காக விளையாடினார்.

Sat, 03/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை