பட்ஜட்டின் வெற்றி மக்களின் வெற்றியாகும்

வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 43 வாக்கு களால் வெற்றி பெற்றமை, பிரதமரினதோ, ஜனாதிபதியினதோ வெற்றியல்லவென்றும் அது மக்களின் வெற்றியே என்றும் நியதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பாக "பைனான்சியல்" டைம் மேற் கொண்ட கணக்கெடுப்பின்படி நூற்றுக்கு 60 வீதத்துக்கும் அதிகமானோர் சிறப்பான யோசனைகளுடைய திட்டமென தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறு மக்களின் ஆதரவைப் பெற்ற வரவு செலவுத் திட்ட யோசனைகளை விரைவாக நிறை வேற்றுவ தே தனது நோக்கமெனவும் அவர் கூறினார்.

இம்முறை வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறிய நிதியமைச்சர், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து பொது தேர்தலுக்கு செல்ல கனவு கண்டவர்கள் தொடர்ந்தும் கனவையே காண வேண்டியிருக்கும் எனவும் கூறினார்.

Thu, 03/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக