தேசிய மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி

தேசிய மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் ஒலுவில் அல்-மதீனா வித்தியலாயம் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அகில இலங்கை மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள ஒலுவில் அல்-மதீனா வித்தியலாயம் தரம் - 04ஆம் பிரிவில் நீளம் பாய்தல், முழங்காலில் நின்று பந்து எறிதல், தடை தாண்டி ஓட்டம், குறுக்குப் பாய்ச்சல், கயிறு அடித்தல் ஆகிய ஐந்து போட்டிகளில் பங்கு கொண்டு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தினை சுவிகரித்துக் கொண்டது.

தரம் - 05ஆம் பிரிவில் நடைபெற்ற பந்து வீசுதல், கலப்பு ஓட்டம், நீளம் பாய்தல், முழங்காலில் நின்று பந்து எறிதல், தடை தாண்டி ஓட்டம், குறுக்குப் பாய்ச்சல், கயிறு அடித்தல் ஆகிய ஏழு போட்டிகளில் பங்கு கொண்டு 3ஆம் இடத்தைப் பெற்று மற்றுமொரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்று சாதனை பட்டியலை தொடராக்கிக் கொண்டன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் மிகுந்த சாதனைகளைப்படைத்து வரும் ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல். றஹ்மதுல்லாஹ், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஏ.எச். பௌசி, ஏ.ஜி. பஸ்மில், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி கஸ்ஸாலி ஆகியோர்கள் இவர்களின் வெற்றிக்கு பாடுபட்ட அதிபர், ஆசிரியர்களை பாராட்டியுள்ளனர்.

ஒலுவில் நிருபர்

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை