உலகளாவிய சுறா மீன் தாக்குதல்கள் அதிகரிப்பு

உலகளாவிய சுறாமீன் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 55 ஆண்டுகளில் அதிகரித்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சுறாமீன் தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.

சுறாமீன் தாக்கும் ஆபத்து, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அதிகம் இருப்பதை ஆய்வு சுட்டிக்காட்டியது.

1960க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சுறாமீன் தாக்குதல் சம்பவங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

சில ஆண்டுகளில், குறிப்பிட்ட ஓரிடத்தில் சுறாமீன் தாக்குதல் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகியிருந்தன. எடுத்துக்காட்டாக, 2015ஆம் ஆண்டில் வடக்கு கரோலைனா, தெற்கு கரோலைனா மாநிலங்களில் திடீரென சுறாமீன் தாக்குதல்கள் அதிகம் நேர்ந்தன.

14 நாடுகளில் நடந்த சுறாமீன் தாக்குதல்கள் பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அமெரிக்காவின் சில வட்டாரங்கள், அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற சுறாமீன் தாக்குதல்கள் அதிகம் நடக்கும் இடங்கள் அவற்றில் அடங்கும்.

அந்த ஒவ்வொரு நாட்டிலும், 1960ஆம் ஆண்டில் இருந்து பத்துக்கும் அதிகமான தாக்குதல் சம்பவங்கள் ஏற்பட்டிருந்தன.

சுறாமீன் தாக்குதல்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் போல் வன் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை